பங்குச்சந்தைகளில் லேசான உயர்வு..
இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சாதகமான சூழல் காணப்பட்டது. வாரத்தின் 2ஆவது வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் , 70புள்ளிகள் உயர்ந்து 80ஆயிரத்து 288 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 7 புள்ளிகள் உயர்ந்து 24ஆயிரத்து335புள்ளிகளாகவும் வணிகம் நிறைவுற்றது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம்,மாலு பேப்பர் மில்ஸ் நிறுவனங்கள் பெரியளவில் லாபத்தை பதிவு செய்தன.வருன் பீவ்ரேஜஸ், டிவிஎஸ் மோட்டார்,டாடா டெக்னாலஜீஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் குறிப்பிடத்தகுந்த சரிவை கண்டன ஒரு கிராம் தங்கம் 8ஆயிரத்து980 ரூபாயாகவும், ஒரு சவரன் தங்கம் 71 ஆயிரத்து 840 ரூபாயாக இருந்தது. . வெள்ளி விலை 111 ரூபாயாகவும், கட்டி வெள்ளி விலை கிலோ1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு நிலையான ஜிஎஸ்டி மற்றும் கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரம் உள்ளிட்டவையும் நகையின் தொகையுடன் சேர்க்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்
