இல்லாதவனிடம் பிடுங்கி, இருக்கிறவனுக்கு கொடுக்கும் பாரத ஸ்டேட் வங்கி..
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட்வங்கி, 2008 உலகளவில் ஏற்பட்ட பொருளாதார
வீழ்ச்சியை கூட அசால்ட்டாக சமாளித்த ஒரு நிறுவனம், இந்த நிலையில் அண்மையில் அந்த நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது 10 கோடி ரூபாய்க்கும் கீழ் உள்ள டெபாசிட்தாரர்களுக்கு 5 அடிப்படை புள்ளிகள் வட்டி குறைக்கப்படுகிறதாம்.
இந்த குறைக்கப்பட்ட வட்டி நடைமுறை கடந்த 15ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதற்கு முன்பு 2.75% வட்டி அளித்து வந்த பாரத ஸ்டேட் வங்கி,கடந்த 15ம் தேதி முதல் 10 கோடி ரூபாய்க்கும் கீழ்
உள்ள டெபாசிட் தொகைக்கு 2.70% வட்டியை அளித்து வருகிறது. இது பணத்தை டெபாசிட் செய்தவர்களை
அதிர வைத்துள்ளது.
இதே ஸ்டேட் வங்கி 10 கோடி ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்பவர்களுக்கு 3% வட்டி தருவதாக கூறியுள்ளது.
பணம் இருந்தால் தான் மதிப்போம் என்ற வகையில் செயல்படும் பாரத ஸ்டேட் வங்கியின் செயல்பாடுகளை பலரும்
கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.