தலைதூக்கிய சந்தைகள்.
இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 18ஆம் தேதி சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 104 புள்ளிகள் உயர்ந்து 72,748 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 32 புள்ளிகள் உயர்ந்து 22,055 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. துவக்கத்தில் வெகுவாக சரிந்த இந்திய சந்தைகள், பிற்பகலில் உயரத் தொடங்கின. தேசிய பங்குச்சந்தையில் Tata Steel, M&M, JSW Steel, Tata Motors,Apollo Hospitals ஆகிய நிறுவன பங்குகள் லாபத்தை கண்டன. அதேபோல் Tata Consumer Products, UPL, Infosys, Adani Ports, Titan Company ஆகிய நிறுவனங்கள் சரிவை பதிவு செய்தன. ரியல் எஸ்டேட், ஊடகம், ஆட்டோமொபைல் துறை பங்குகளும், சுகாதாரத்துறை பங்குகளும் உயர்வில் முடிந்தன. தகவல் தொழில் நுட்பம் சந்தையில் வேகமாக விற்கப்படும் பொருட்கள் ஆகியன அரை விழுக்காடு முதல் 1.5 விழுக்காடு வரை சரிவை கண்டன. Bharti Airtel, Cigniti Technologies, Colgate Palmolive, Force Motors, Hercules Hoists, Linde India, Oracle Financial Services, Reliance Infra, SMS Pharma, Solar Industries, TCS உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் கடந்த 52 வாரங்களில் இல்லாத உச்சத்தை தொட்டுள்ளன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை முன்தின விலையை விட சவரனுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 6090 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் 48ஆயிரத்து720 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை,கிராமுக்கு30காசுகள் குறைந்து 80 ரூபாயாக உள்ளது. கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ, 300ரூபாய் குறைந்து 80 ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு தற்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேர்க்க வேண்டும், இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்