கோடீஸ்வரர்களான பணியாளர்கள்..
ஸ்விகி நிறுவனம் இன்று பங்குச்சந்தையில் அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில் ஐந்தாயிரம் பணியாளர்களுக்கு 9ஆயிரம் கோடி ரூபாய் அளிக்கப்படஇருப்பதாக கூறப்படுகிறது. ஸ்விகி நிறுவனத்துடன் பல ஆண்டுகளாக இருக்கும் 500 பணியாளர்கள் பங்குகளை வாங்கியிருந்தால் அவர்களுக்கு தலா 1 கோடி ரூபாய் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோன்று பங்குகளை வைத்திருக்கும் பணியாளர்களுக்கு நிதி அளிக்கும் திட்டத்தை பிளிப்கார்ட் அறிவித்து 12ஆயிரத்து 500 கோடி ரூபாயை ஊழியர்களுக்கு அளித்தது. கடந்த மாதம் ஸ்விகியின் இணை நிறுவனர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுக்கு அந்நிறுவனம் ஆயிரத்து 600 கோடி ரூபாய் பணத்தை அளித்தது. ஸ்விகியைப்போலவே, அதன் போட்டி நிறுவனமான சொமேட்டோவும் தனது ஊழியர்களுக்கு சில சலுகைகளை அளித்தது. சொமேட்டோ நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பணப் பலன்களை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.