உற்பத்தி துறையில் அசத்தும் தமிழ்நாடு..
இந்தியா முழுவதும் உற்பத்தி துறையில் வேலைவாய்ப்புகள் குறித்த சிக்கல்கள் நிலவி வரும் நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு சிறப்பான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அப்படித்தான் நிர்மல் சத்யராஜ் என்று குமாரபாளையம் நபர் பல்வேறு ஆலோசனைகள் கொடுத்து வருகிறார். 37 வயதாகும் அவர் மனிதவள பிரிவில் நிறுவனங்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களை வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராமில் பதிவு செய்து வருகிறார்.
கல்லூரி மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூவுக்கும் அவர் தயார் படுத்தி வருகிறார். ஆப்பிள் நிறுவனத்துக்கு உதிரி பாகங்கள் அளிக்கும் 4 முக்கிய நிறுவனங்களான பாக்ஸ்கான், பெகட்ரான் சால்காம்ப், டாடா எலெக்ட்ரிக்ரானிக்ஸ் நிறுவனம் 1 லட்சத்து 15 ஆயிரம் பேரை அடுத்த 3 ஆண்டுகளில் வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளனர். 8 ஆம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு கூட வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்களும் நடந்து வருகின்றன. இதற்கும் மாணவர்களை நிர்மல் தயார் படுத்தி வருகிறார்.