வளர்ச்சிதான் வேண்டும் – டாடா சன்ஸ்

டாடாசன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் சந்திரசேகரன். டாடா குழுமத்தில் உள்ள நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுக்கு இவர் அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்ட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். டாடா குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பு 375 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. 2025 நிதியாண்டின் முதல் பாதியில், டாடா குழும நிறுவனங்களில் சிலவற்றில் வளர்ச்சி ஒற்றை இலக்கங்களை எட்டியுள்ளன. இதனால் வருவாய் குறைந்துவிட்டது. டாடா குழுமத்தின் மொத்த சந்தை மூலனமே 5 %மட்டுமே வளர்ந்துள்ளன. டாடா மோட்டார்ஸ் டாடா கம்யூனிகேஷன்ஸ், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் பெரிய அளவில் சரிந்துள்ளன. டாடா குழுமத்தின் ஒட்டுமொத்த லாபம் 37விழுக்காடு உயர்ந்து 43,171 கோடி ரூபாயாக இருக்கிறது. அமெரிக்காவில் வளர்ச்சி குறைந்தபோதும், டிசிஎஸ் நிறுவன வளர்ச்சி 6%ஆக இருந்தது. டாடா கெமிகல்ஸ் நிறுவனத்தின் லாபம்தான் முதல் பாதியில் 457 கோடி ரூபாயாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது கடந்தாண்டு 1082 கோடி ரூபாய் லாபத்தை ஈட்டியிருந்தது. டாடா டிஜிட்டல், ஏர் இந்தியா, டாடா எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்களை அடுத்த 3 ஆண்டுகளில் வலுப்படுத்த அந்த குழுமம் பணிகளை செய்து வருகிறது.