டாடா ஸ்டீல் பங்கு தாரர்கள் கவனத்துக்கு..

டாடா ஸ்டீல் நிறுவனத்திந் பங்குகள் கடந்த ஓராண்டாக இழப்பை சந்தித்து வரும் நிலையில் அந்த நிறுவனத்துக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நெதர்லாந்தில் அந்த நிறுவனத்தின் ஸ்டீல் ஆலைக்கு 27 மில்லியன் பவுன்ட் அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நெதர்லாந்தில் டாடா ஆலை இயங்குவதில் சந்தேகம் எழுந்துள்ளதுடன், ஆலை மூடப்பட அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரிட்டனில்தான் அதிக நிதி செலவீனத்தை அந்த நிறுவனம் செய்திருந்தது. 7 மில்லியன் டன் அளவுக்கு ஸ்டீல் உற்பத்தி செய்ய பசுமை முயற்சிகளை அந்த நிறுவனம் செய்து வந்தது. மறு சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு அந்த நிறுவனத்துக்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும் என்றும் மதிப்பிடப்பட்டது. ஐரோப்பாவில் ஸ்டீல் தேவை குறைந்துள்ளதால் அந்த நிறுவனத்துக்கு சிக்கல் வலுத்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் டாடா ஸ்டீல் செயல்பாடுகள் இல்லாமல் போனது. வர்த்தக நேர முடிவில் டாடா ஸ்டீல் நிறுவன பங்குகள் 138.14 ரூபாயாக இருக்கிறது. டாடா ஸ்டீல்தான் நஷ்டத்தில் இயங்குகிறது. மாறாக போட்டி நிறுவனங்களான ஜிண்டால் ஸ்டீல், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் ஆகியவை, முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை அளிக்கின்றன. 240 கோடி ரூபாய் அபராதம் என்பது டாடா ஸ்டீலின் நெதர்லாந்து ஆலையின் வரிக்கு பிந்தைய தொகைக்கு சமமாகும். பிரிட்டனில் பிரபலமான ஜாகுவார் லேண்ட் ரோவர் வகை கார்களுக்கு டாடா ஸ்டீலின் உலோகங்கள்தான் அனுப்பி வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நெதர்லாந்தில் இயங்கி வரும் டாடா ஆலையில் இருந்து வெளியேறும் கரிமத்தின் காரணமாக அங்குள்ள மக்களின் ஆயுட்காலம் குறைவதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் விதிகளை மீறி அதிக கரியமிலவாயு வெளியேற்றுவதாக மீண்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது.