பிஸ்லரி நிறுவனத்தை கைப்பற்றுகிறது டாடா நிறுவனம்!!!
பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான தண்ணீர் நிறுவனம் என்றால் அது பிஸ்லரி நிறுவனம் என்பதில் மாற்றுக்கருத்து
இருக்காது. இந்த நிறுவனத்தை தற்போது 82 வயதாகும் ரமேஷ் சவ்ஹான் என்பவர் அடிப்படையில் இருந்து வளர்த்து மிகப்பெரிய சாம்ராஜ்யமாக உருவாக்கியுள்ளார். இத்தனை பெரிய நிறுவனத்தை தனக்கு பிறகு பார்த்துக்கொள்ள தனது மகள் ஜெயந்தி தயாராக இல்லை என்று வருத்தப்பட்ட ரமேஷ், தற்போது அதனை பெருந்தொகைக்கு டாடா நிறுவனத்துக்கு விற்க உள்ளார். குத்துமதிப்பாக 6ஆயிரம் முதல் 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இந்த நிறுவனம் கைமாற இருக்கிறது. டாடா குழுமத்துக்கு பிஸ்லரி கம்பெனியை விற்பது வலிமிகுந்த முடிவாக இருந்தாலும்,அவர்கள் பிஸ்லரியை நன்றாக வளர்த்துக்கொள்வார்கள் என்றும் ரமேஷ் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் பிஸ்லரி நிறுவனத்தை வாங்கி வைத்து விட வேண்டும் என ரிலையன்ஸ், நெஸ்ட்லே உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டி போட்ட போதும், தனக்கு டாடா குழுமம் பிடித்துவிட்டதால் அவர்களுக்கே பிஸ்லரி நிறுவனத்தை விற்க ரமேஷ் இசைவு தெரிவித்துள்ளார். டாடா குழுமத்துடன் 2 ஆண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தையின் முடிவாக இந்த டீல் முடிக்கப்பட்டுள்ளது. தம்ப்ஸ் அப் நிறுவனத்தை கோக்க கோலா நிறுவனத்துக்கு விற்றதும் இதே ரமேஷ் சவ்ஹான் தான் இந்த நிலையில் பிஸ்லரி நிறுவனத்தை விற்றுவிட்டு அதில் இருந்து கிடைக்கும் பணத்தை வைத்து மக்களுக்கு நல்ல காரியத்தை செய்ய இருப்பதாக ரமேஷ் தெரிவித்துள்ளார். மக்கள் தினசரி பயன்படுத்தும் வீட்டு உபயோக பொருட்கள் சந்தையில் டாடா குழுமம் தண்ணீர் பாட்டில் விற்பதில் சற்று பின்தங்கி இருந்தது. தற்போது பிஸ்லரி டாடா வசம் வந்துள்ளதால், இந்திய அளவில் தண்ணீர் பாட்டில் விற்பனையில் டாடா குழுமம் நம்பர் 1 இடத்தை பிடிக்க இருக்கிறது