டாடாவின் அடுத்த அதிரடி…
முன்னணி ஜாம்பவான் நிறுவனமான டாடா குழுமம், ஏர் இந்தியா, விஸ்தாரா, ஏர் ஏசியா என்ற மூன்று விமான நிறுவனங்களை தன் வசம் வைத்துள்ளது.
இதில் இந்திய அரசிடம் இருந்து கடந்தாண்டு அக்டோபரில் 18 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியது. இதன் செயல்பாடுகள் கடந்த ஜனவரி முதல் துவங்கின.
இந்த நிலையில் டாடா குழுமத்துக்குள் முதல்கட்டமாக ஏர் ஏசியாவையும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்களை ஒரு பிரிவாகவும், ஏர் இந்தியாவையும் விஸ்தாராவையும் மற்றொரு பிரிவாகவும் இணைக்க பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
இதன் செயலாக்க இணைப்புத்திட்டம் குறித்து ஒரு வருடத்துக்குள் அறிக்கை சமர்பிக்க டாடா குழுமம் அதன் விமான நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த குழு அளிக்க உள்ள தரவுகளை வைத்து அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இணைப்பு சாத்தியமான பிறகு வரும் 2024ம் ஆண்டுக்குள் அனைத்து விமான சேவைகளும்
டாடா குழுமத்தின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏர் ஏசியா நிறுவனத்தில் 83.67% பங்குகள் மட்டுமே தற்போது டாடா வசம் உள்ள நிலையில் அதனை முழுமையாக அதாவது 100 விழுக்காடு வாங்கிக்கொள்ளும் பணிகளும் மற்றொரு பக்கம் நடந்து வருகிறது. இதேபோல் விஸ்தாரா நிறுவனத்தில் 51%பங்குகள் மட்டுமே தற்போது டாடாவசம் உள்ளது. மீதம் 49 விழுக்காடு பங்குகள் சிங்கப்பூர் நிறுவனத்திடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.