பேஸ்மெண்ட் மட்டும்தான் வீக்!!!! ஆனா பில்டிங் ஸ்டிராங்!!!!

எச்டிஎப்சி நிறுவனம் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு தனியார் வங்கியாகும். இந்த வங்கியன் தலைவர் தீபக் பாரெக்
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி வேகமாக
செல்கிறது என்றார் உலகளவில் பல நாடுகளும் பொருளாதார சிக்கலை சந்தித்து, தவித்து வரும் நிலையில் இந்திய பொருளாதாரம் அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகளில் இலக்கை எட்டும் என்றும் தீபக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.ரூபாயின் மதிப்பு நடப்பாண்டில் மட்டும் 10 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இந்தியாவில் இருந்து முதலீடுகளை
எடுத்துச்செல்வதில் நிறுவனங்கள் ஆயத்தமாகியுள்ளன. இந்தியாவின் அன்னிய நாட்டு பண கையிருப்பு கடந்தாண்டு செப்டம்பரில் 642பில்லியன் டாலராக இருந்தது. இந்தாண்டு இந்தியாவின் அன்னிய பண கையிருப்பு 528 பில்லியன் டாலராக சரிந்துள்ளது. ஜப்பானிய பணமான yen இந்தாண்டில் மட்டும் 23விழுக்காடு சரிந்துள்ளது,பிரிட்டன் பவுண்ட் 16%,சீனாவின் யுவான் 15%ஆகிய அளவில் சரிந்துள்ளன. இதுபற்றி பேசிய தீபக் இந்திய பொருளாதாரத்தில் உள்நாட்டு உற்பத்தி 7 விழுக்காடாக மட்டுமே இருந்தாலும் அதிருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்றார். இந்தியாவுக்கு தற்போது இரண்டு சவால்கள் உள்ளதாக கூறியுள்ள அவர், முதல் சவால் அமெரிக்க பொருளாதாரம், இரண்டாவது சவால் அமெரிக்க பொருளாதாரத்தால் உயர்ந்து வரும் டாலர் மதிப்பு என பட்டியலிட்டுள்ளார். இந்தியாவில் கடன் பெற்று திரும்ப செலுத்துவது தொடர்பாக வலுவான கட்டமைப்பு தேவை என்றும் தீபக் கூறியுள்ளார்.