டாப் 10 நிறுவனங்களின் மூலதனம் உயர்கிறது..

இந்தியாவில் முன்னணியில் உள்ள டாப் 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்களின் கூட்டு சந்தை மதிப்பு 2.10லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த சந்தை மூலதனம், டிசிஎஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களுக்கு நல்ல லாபத்தை தருகிறது. கடந்த வாரத்தில் இந்திய பங்குச்சந்தைகளில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1.55%, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 1.93% விலை உயர்ந்தன. இந்த சூழலில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 66, 985 கோடி ரூபாய் உயர்ந்து 16.90லட்சம் கோடி ரூபாயாகவும், டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 46,094 கோடி ரூபாய் உயர்ந்து 13.06லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியின் மூலதனம் 39,714 கோடி ரூபாய் உயர்ந்து 6.53லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதேபோல் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் மூலதனம் 35,276 கோடி உயர்ந்து 9.30லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் ஐடிசியின் சந்தை மூலதனம் 5.05லட்சம் கோடியாகவும், ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 5.17லட்சம் கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. அதேநேரம் எச்டிஎப்சி, பஜாஜ் ஃபைனான்ஸ், இன்போஸிஸ் ஆகிய நிறுவனங்களின் சந்தை மூலதனம் குறைந்துள்ளது. இந்திய அளவில் சந்தை மூலதனம் அதிகம் உள்ள நிறுவனத்தின் பட்டியலில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.