மின்சார உதிரி பாக உற்பத்தியை கண்காணிக்கிறது மத்திய அரசு !!!

FAMe -2 என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளது. இதன் மதிப்பு 10 ஆயிரம் கோடி ரூபாயாகும். மின்சார வாகன உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் தரவுகளை இந்த அமைப்பு பதிவிறக்கம் செய்யும்.
இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசு வழங்கும் மானியம் சரியாக சென்று சேர்கிறதா என்பதை உறுதி செய்ய முடியும் என கூறப்படுகிறது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பதிலாக இந்திய நிறுவனங்களை இந்த துறையில் ஊக்குவிக்கும் நோக்கில் இந்த திட்டத்தை மத்திய அரசு துவங்குகிறது
ஈஆர்பி என்ற மென்பொருளில் இருக்கும் தரவுகளை மத்திய அரசு API எனப்படும் அம்சம் மூலம் எடுத்துக்கொள்ள உள்ளது
இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவில் தொழில்தொடங்குவது மற்றும் வணிகம் செய்வதை எளிமையாக்க இந்த ஃபேம் -2 திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய கனரக இயந்திர தொழிற்சாலைகள் அமைச்சக செயலர் அருண் கோயல் தெரிவித்துள்ளார்
இந்த வகை தரவுகளை மத்திய அரசு பெறுவதன்மூலம் வெளிப்படைத்தன்மை உறுதியாகும் என்றும் இதனால் கூடுதல் முதலீடுகள் அதிகம் ஈர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
பல்வேறு நிறுவனங்கள் மத்திய அரசை ஏமாற்றி அரசு அளிக்கும் மானியத்தை முறைகேடாக பெற முயற்சி செய்வதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது.
இதனையடுத்து முறைகேடுகளை தடுக்கவே இந்த ஃபேம் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.