டிவிடன்ட்டை அறிவித்துள்ள நிறுவனம்!!! எது தெரியுமா???
முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் தனது முதலீட்டாளர்களுக்கு டிவைடண்ட் அளிப்பதாக கடந்த வியாழக்கிழமை அறிவித்துள்ளது. அந்த நிறுவனம் தனது இரண்டாவது காலாண்டு நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஒரு ஆண்டில் அந்த ஐடி நிறுவனம் 11 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளதாகவும், லாபமாக 6 ஆயிரத்து 21 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது
தங்களுக்கு கிடைத்த வருவாய்க்காக முதலீட்டாளர்களின் ஒவ்வொரு பங்குக்கும் டிவைடண்ட்டாக 16 ரூபாய் 50 காசுகள் அளிக்க உள்ளது
இது கடந்தாண்டு அளிக்கப்பட்ட டிவைடண்ட் ஆன 15 ரூபாயை விட 10 விழுக்காடு அதிகமாகும்.இடைக்கால டிவைடண்ட் ஆக மட்டும் 6 ஆயிரத்து 940 கோடி ரூபாய் அளிக்கப்பட உள்ளது.
வரும் 28ம் தேதி ரெக்கார்ட் தினமாகவும்,நவம்பர் 10ம் தேதி பணம் அளிக்கப்பட்டுவிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
9ஆயிரத்து 300 கோடி ரூபாய் பங்குகளை நிறுவனமே மிண்டும் வாங்கிக்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது
நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் வலுவான நிலையில் நிறுவனம் உள்ளதாக அந்த நிறுவன தலைமை செயல் அதிகாரி சலில் பாரெக் தெரிவித்துள்ளார்.