அதிகரிக்கும் திவாலாகும் நிறுவனங்களின் லிஸ்ட்!!
அண்மையில் எப்டிஎக்ஸ் என்ற கிரிப்டோ கரன்சி நிறுவனம் திவாலாகியது.இதைத் தொடர்ந்து அதில் முதலீடு செய்தவர்கள் செய்வதறியாது தவித்துள்ளனர். இந்த திகில் அடங்குவதற்குள்ளேயே block fi என்ற கிரிப்டோ நிறுவனமும் திவாலை நோக்கி செல்கிறது. எப்டிஎக்ஸ் நிறுவன நஷ்டம் மட்டும் 32 பில்லியன் அமெரிக்க டாலர்களாக சரிந்துள்ள நிலையில் பிளாக் ஃபை நிறுவனம் கடந்த 11ம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் போட்ட தொகையை எடுக்க தடை விதித்து உள்ளது. அமெரிக்காவில் முன்னணி கிரிப்டோ கரன்சிகளாக திகழ்ந்த நிறுவனங்கள் அடுத்தடுத்து திவாலாகி ஆட்டம் கண்டுள்ள நிலையில்
கிரிப்டோ கரன்சி மீது இருந்த மக்களின் நம்பிக்கை படிப்படியாக சரிந்து வருகிறது. இது தொடர்பாக அந்நாட்டு பெடரல் அதிகாரிகள் விசாரணையை தொடங்க உள்ளனர். கிரிப்டோவில் உள்ள பிரச்னைகளால் தான் இந்தியாவில் அதற்கு அனுமதி அளிக்கப்படாமல் உள்ளது. மேலும் கிரிப்டோ கரன்சிக்கு மாற்றாகத் தான் டிஜிட்டல் ரூபாயை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்துகிறது. ரொக்கப்பணமே சிறந்தது என்ற நிலையை நோக்கி மக்கள் திரும்பத் தொடங்கியுள்ளதால் கிரிப்டோ கரன்சி நிறுவனங்கள் பெட்டியை கட்டிக்கொண்டு நடையை கட்டத் தொடங்கியுள்ளனர்.