வாடியா குடும்பத்துக்கு கட்டம் சரியில்ல….
பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் நிதிநிலை குறித்த அறிக்கையை தவறாக காட்டிய குற்றத்துக்காக செக்யூரிட்டி மார்க்கெட்டில் பங்கேற்க 10 நிறுவனங்களுக்கு செபி 2 ஆண்டுகள் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது பிரபல நிறுவனமான பாம்பே டையிங்மற்றும் பிரபல பொருளாதார நிபுணரும், புரோமோட்டருமான நெஸ்வாடியா உள்ளிட்டோரின் பெயர்களும் அடங்கும். இந்த தடை மட்டுமில்லாமல் 15 கோடியே 75 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.இந்த அபராதத் தொகையை 45 நாட்களுக்குள் செலுத்தவும் ஆணையிடப்பட்டுள்ளது. 2011-12,2018-19ம் ஆண்டுகளில் பாம்பே டையிங் நிறுவனத்தின் கணக்குகளில் சந்தேகம் உள்ளதாக புகார்கள் குவிந்தன. இந்த புகார்கள் குறித்து விரிவான விசாரணையை செபி நடத்தியது. குறிப்பிட்ட காலகட்டத்தில் வியாபாரம் 2 ஆயிரத்து 492 கோடியாக இருந்ததாகவும், லாபம் ஆயிரத்து 302 கோடி ரூபாயாக
இருந்ததாகவும் கணக்கு காட்டப்பட்டது.இது குறித்து ஆராய்ந்து 100 பக்க அறிக்கையை செபி வெளியிட்டுள்ளது.
அதில் பாம்பே டையிங் நிறுவனத்துக்கு அபராதமாக இரண்டேகால் கோடி ரூபாய்,நுசில் வாடியாவுக்கு 4 கோடி,
ஜகாங்கீர் வாடியாவுக்கு 5 கோடி,நெஸ் வாடியாவுக்கு 2 கோடி,மேதாவுக்கு 50 லட்சம், ஸ்கால் நிறுவனத்துக்கு 1 கோடி
25 லட்சம் ரூபாய் அதன் இயக்குநர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாயும் அபராதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.