பெரிதாக வீழ்ந்த பங்குச்சந்தைகள்..
சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல் வர்த்தக நாளில் மிகப்பெரிய சரிவை கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரத்து 272 புள்ளிகள் சரிந்து 84 ஆயிரத்து 299 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையிலும் சரிவு காணப்பட்டது. அதன் குறியீட்டு எண்ணான நிஃப்டி, 368 புள்ளிகள் சரிந்து 25 ஆயிரத்து 810 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்தன ஹிரோ மோட்டோகார்ப், டிரெண்ட், ஆக்சிஸ் வங்கி ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பாரத் எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவை சந்தித்தன. உலோகம் மற்றும் ஊடகத்துறை பங்குகள் மட்டுமே ஒரு விழுக்காடு ஏற்றத்தை சந்தித்தன. மற்ற துறை பங்குகள் பெரிய சரிவை கண்டன ஆட்டோமொபைல், வங்கி, தகவல் தொழில்நுட்பத்துறை, மருந்து மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் 1 முதல் 2 விழுக்காடு வரை சரிவை கண்டன. செப்டம்பர் 30 ஆம் தேதி திங்கட் கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன்120 ரூபாய் குறைந்து 56ஆயிரத்து 640 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் 15 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 80 ரூபாயாக விற்கப்பட்டது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 101 ரூபாயாக விற்கப்பட்டது. கட்டி வெள்ளி விலை 1லட்சத்து ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் 3 விழுக்காடு எந்த கடையில் எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்டாயம் செலுத்த வேண்டும். அதே நேரம் தங்கம் மற்றும் வெள்ளிக்கு கடைக்கு கடை செய்கூலி, சேதாரம் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.