விஸ்தாரா-ஏர் இந்தியா இணைக்கும் முயற்சி தீவிரம்
டாடா குழுமத்தின் கீழ் உள்ள ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா நிறுவனங்களை இணைக்கும் பணிகளில் டாடா குழுமம் அதீத முயற்சி செய்து வருகிறது.
தற்போது இண்டிகோ நிறுவனம் இந்திய அளவில் முன்னோடி நிறுவனமாக உள்ளது. இந்த சூழலில் இண்டிகோ நிறுவனத்துடன் போட்டி போடும் டாடா நிறுவனம், அதன் ஏர் இந்தியா நிறுவனத்தையும், விஸ்தாரா நிறுவனத்தையும் நிர்வாக ரீதியில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. விஸ்தாரா நிறுவனத்தில் 25 விழுக்காடு பங்குகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது. இதன் பங்கு மதிப்பு 10 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. அதனையும் டாடா குழுமத்தில் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கான பணிகள் ஓராண்டில் முடிய உள்ளதாக கூறப்படுகிறது. விஸ்தாரா மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்களை இணைப்பதன் மூலம் கூட்டு நிறுவனத்தின் மொத்த மதிப்பு 30 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது
விஸ்தாரா நிறுவனம் கடந்த 2021ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டில் 5 ஆயிரத்து 520 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில் 2, ஆயிரத்து 730 கோடி ரூபாய் வருவாய் மட்டுமே ஈட்டி இருந்தது.
அண்மையில் விஸ்தாரா நிறுவனம் பாரிஸ் மற்றும் டோக்யோவுக்கு விமான சேவை தொடங்கியுள்ள நிலையில் அதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது
விஸ்தாராவையும், ஏர் இந்தியாவையும் இணைக்கும் டாடா குழுமம், அடுத்தகட்டமாக ஏர் ஏசியாவையும்,ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்துடன் இணைக்க உள்ளது. 2025ம் ஆண்டுக்குள் இந்த இணைப்பு முழுமையாக முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது