இது புதுசு!!! இன்னும் ஒரு மாதத்துக்குள் வருகிறது!!!
இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் மத்திய ரிசர்வ்வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் பங்கேற்றார்
அதில் பேசிய அவர், நாடுகள் கடந்து மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனையும் இ-ரூபாய் மூலம் செய்ய ஏற்பாடுகள்
நடப்பதாக கூறினார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இ-ரூபாய் திட்டம் விரைவில் அதாவது ஒரு மாதத்துக்குள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது,மை தீட்டுவது உள்ளிட்ட பணிகளுக்கு மிகவும் அதிக செலவாகிறது என்று கூறியுள்ள சக்தி காந்ததாஸ், டிஜிட்டல் பணத்தை நிர்வகிக்க குறைவான செலவே ஆகும் என்று தெரிவித்துள்ளார். சோதனை அடிப்படையில் 9 வங்கிகளில் இ-பணம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. அரசு பாண்டு பத்திரங்களை டிஜிட்டல் முறையில் வாங்க இந்த டிஜிட்டல் ரூபாய் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் டிஜிட்டல் கரன்சி 2 வகைகளாக பிரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது முதல் பிரிவு பொதுப்பிரிவாகவும், 2வது பிரிவு ரீட்டெயில் மற்றும் ஹோல்சேலாக இருக்கும் என்று வகைபடுத்தப்பட்டுள்ளது. ரீட்டெயில் பிரிவு டிஜிட்டல் பணம் அனைவருக்கும் அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹோல்சேல் பிரிவு பரிவர்த்தனைகள் நிதி நிறுவனங்களுக்கு மட்டுமே பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.