இது ஐடிசி அப்டேட்..
ஐடிசி இன்ஃபோடெக் நிறுவனம் பிளேஸ்கிளான் டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிட்டட் என்ற நிறுவனத்தின் 100 விழுக்காடு முழுமையான பங்குகளை வாங்கிவிட்டதாக அறிவித்துள்ளது. கடந்த 1 ஆம் தேதி முதல் பிளேஸ்கிளான் நிறுவனம் ஐடிசிக்கு சொந்தமாகியுள்ளது. கிளவுடு கம்பியூடிங்கில் தனித்துவம் வாய்ந்த நிறுவனமான பிளேஸ் கிளான், அமேசான் வெப்சர்வீஸ், அசூர், ஜிசிபி உள்ளிட்ட சேவைகளில் ஈடுபட்டு வந்தது. மொத்தம் 485 கோடி ரூபாய் கொடுத்து பிளேஸ் கிளான் நிறுவனத்தை ஐடிசி இன்ஃபோடெக் நிறுவனம் வங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. பிளேஸ் கிளான் நிறுவனம் மற்றும் அதன் பிறநாட்டு உரிமைகளும் வாங்கப்பட்டுள்ளது. கடந்த 2010 மே 25 ஆம் தேதி தொடங்கப்பட்ட பிளேஸ்கிளான் நிறுவனம், அடுத்தடுத்த ஆண்டுகளில் கணிசமான வருவாயை ஈட்டித்தந்தது. இந்தியா,சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மலேசியா, பிலிப்பின்ஸ், நியூசிலாந்து, அமெரிக்கா, கனாடா ஆகிய நாடுகளிலும் இந்த நிறுவனத்துக்கு கிளை அலுவலகங்கள் உள்ளன.