இந்த விலை கட்டுப்படி ஆகாது!!!! வருகிறதா அடுத்த விலை உயர்வு???
இந்தியாவின் முன்னணி சிம்கார்டு நிறுவனமான வோடஃபோன் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த நிலையில் அந்த நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் தொலை தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்களின் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு காலகட்டத்தில் கோடிகளை அள்ளிய வோடஃபோன் நிறுவனம் தற்போது மிகமோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது கடந்த 5 காலாண்டுகளாக வோடஃபோனின் லாபம் கணிசமாக குறைந்துள்ளது. ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து அந்நிறுவனம் பெறும் சராசரியான தொகை 131 ரூபாயாக சரிந்துள்ளது. வோடஃபோன் இந்தியா நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முதலீட்டாளர்கள் பங்கு மிகவும் அவசியம் என்று தெரிவித்துள்ள அந்நிறுவனம் இந்தியாவில் கடந்த சிலஆண்டுகளாக செல்ஃபோன் சிம்கார்டு சேவைக்கான கட்டணம் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு மிகவும் குறைவாக இருப்பதாகவும், பிளான்களின் பணத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. ஜியோ நிறுவனம் இந்தியாவில் அதிக தொகை கொடுத்து 5ஜி ஏலத்தை எடுத்துள்ள நிலையில் தங்கள் நிறுவனத்துக்கும் 5ஜி சேவை அளிக்க அனுமதி கிடைத்துள்ளதாகவும்,ஆனால் முதலீட்டாளர்கள் அதிகம் தேவை என்றும் வோடஃபோன் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலண்டில் வோடஃபோன் நிறுவனத்தின் கடன் தொகை 7 ஆயிரத்து 595 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்தாண்டு இதே காலகட்டத்தை விடவும் 400 கோடி ரூபாய் அளவுக்கு அதிகமாகும்… கடன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள வோடஃபோன் நிறுவனத்தை மத்திய அரசு காக்குமா, விலை ஏற்றப்படுமா என்பதை காலம் தான் தீர்மானிக்க உள்ளது.