டாப் 9 நிறுவனங்கள் காட்டில் பணமழை..

இந்தியாவின் முன்னணியில் உள்ள 10 நிறுவனங்களில் 9 நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு 3 டிரில்லியன் ரூபாயாக கடந்த வாரம் ஏற்றம் கண்டுள்ளது. இதில் ஐசிஐசிஐ, பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களுக்குத்தான் மிகப்பெரிய லாபம் கிடைத்ததாக கூறப்படுகிறது.
கடந்தவாரத்தில் பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சாதக சூழலால் மும்பை பங்குச்சந்தை 3 ஆயிரத்து 76 புள்ளிகள் ஏற்றமும், தேசிய பங்குச்சந்தை 953 புள்ளிகளும் ஏற்றம் கண்டன. ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனம் 64,426 கோடி ரூபாய் உயர்ந்து 9.47 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல், பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 53,286 கோடி ரூபாய் உயர்ந்து 9.84 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் எச்டிஎப்சி வங்கியின் சந்தை மூலதனம் 49,105 கோடி ரூபாய் உயர்ந்து 13.54லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 39 ஆயிரத்து 311 கோடி உயர்ந்து 17.27லட்சம் கோடி ரூபாயாகவும், பஜாஜ் ஃபினான்ஸ் நிறுவனத்தின் மதிப்பு 30,953 கோடி ரூபாய் உயர்ந்து 5.52லட்சம் கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இதேபோல் டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 24,259 கோடி உயர்ந்து 12.95லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் மதிப்பு 22,534 கோடி ரூபாய் உயர்ந்து 6.72லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவன மதிப்பு 16,823 கோடி ரூபாய் அதிகரித்து 5.28லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இன்போசிஸ் 5543 கோடிரூபாய் மதிப்பை உயர்த்தி 6.61லட்சம் கோடி ரூபாயாக சந்தை மூலதன மதிப்பு உயர்ந்துள்ளது. எனினும் ஐடிசி நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 7,570 கோடி குறைந்து 5.07லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது. இந்தியாவின் மிகவும் மதிப்பு மிக்க நிறுவனமாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முதலிடத்தில் இருக்கிறது.