22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

PF வட்டி விவரம் அறிவதில் சிக்கல்…

ஊழியர் வருங்கால வைப்பு நிதி எனப்படும் PF பணத்தில் வட்டி விகிதம் எவ்வளவு வருகிறது என்பதை அறியும் வசதி அண்மையில் காணாமல் போனதால் சிலர் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த விவகாரம் குறித்து முன்னாள் இன்போசிஸ் நிறுவன தலைமை நிதி அதிகாரி டி.வி.மோகன்தாஸ் பாய் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், வருங்கால வைப்பு நிதியில் எந்த விதிமீறல்களும் செய்யப்படவில்லை என்றும், வட்டி விவரம் குறித்த தகவல்கள் மென்பொருள் தர உயர்வால் காட்டப்படவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது.

செட்டில்மெண்ட், பணத்தை திரும்ப எடுக்க நினைப்பவர்களுக்கு ஒரு பைசாவும் விடுபடாமல் வட்டியுடன்தான் அளிக்கப்படும் என்றும் நிதியமைச்சகம் விளக்கம் தெரிவித்துள்ளது.

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றிய அதிகாரியே வட்டிப்பணம் எங்கே என்று கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதற்கு மத்திய நிதியமைச்சகம் தெளிவான விளக்கம் அளித்தது, மாதச்சம்பளம் வாங்குவோரை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *