வெளியேறும் திட்டம் இல்லை – UBER
தனது இந்திய வணிகத்திலிருந்து உபெர் வெளியேறவோ அல்லது அதனை மறுசீரமைக்கவோ எந்த திட்டமும் இல்லை என்று அதன் இந்தியா மற்றும் தெற்காசிய தலைவர் பிரப்ஜீத் சிங் கூறினார்.
இந்திய சந்தையில், கார்- வணிகத்தில் மட்டுமே தாங்கள் இருப்பதாகத் தெரிவித்த அவர், மக்கள் தொகையில் 0.5% மட்டுமே இந்த கார் சேவையைப் பயன்படுத்துகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வாடகைக் காரின் விலையைக் குறைப்பதன் மூலம், மக்கள் தொகையில் மிகப் பெரிய பிரிவினருக்கு சந்தையைத் திறப்பதாக அவர் கூறினார்.
சமீபத்தில் Zomatoவில் உள்ள பங்குகளை விற்றதாக கூறிய அவர், மேலும் பல நிறுவனங்களில் உள்ள பங்குகளை அவ்வப்போது விற்று பணமாக்கப் பார்க்கிறோம் என்று கூறினார்.
தற்போது தங்களிடம் உள்ள 6,00,000 ஓட்டுனர்களிடம், 5,000 பேர்களிடம் மட்டும் EVகள் உள்ளன. எனவே, தாங்கள் இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக தெரிவித்த அவர், Uber உலகளவில் 2040 க்குள் முழு மின்மயமாக்கலுக்கு உறுதியளித்துள்ளது என்றும் பிரப்ஜீத் சிங் கூறினார்.