யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும் வருகிறது கட்டுப்பாடு..விவரம் உள்ளே…
தேசிய கட்டண கழகம் அதாவது நேஷனல் பேமண்ட் கார்பரேஷன் எனப்படும் npciநிறுவனம்தான் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு பொறுப்பாக உள்ளது இது அண்மையில் அறிமுகப்படுத்திய யுபிஐ முறைக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது இந்த நிலையில் மூன்றாம் தரப்பு நிறுவனங்களான கூகுள் பே, போன்பே உள்ளிட்ட நிறுவனங்கள் ஒரு பைசா கூட கட்டணம் செலுத்தாமல் யுபிஐ பிரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை உங்கள் கணக்கில் பணம் இருந்தால் போதும் யுபிஐ மூலம் எத்தனை முறை வேண்டுமானாலும் பணத்தை பிறருக்கு அனுப்பிக் கொள்ள முடியும் எந்த வரம்பும் கிடையாது. இந்த சந்தையில் கூகுள் பே மற்றும் ஃபோன் பே நிறுவன பங்கு மட்டும் 80 %ஆக உள்ளது, இந்த நிலையில் சந்தையில் இந்த நிறுவனங்களின் ஆதிக்கத்தை தவிர்க்கும் நோக்கில், புதிய நடைமுறையை மத்திய அரசு கொண்டுவர திட்டமிட்டு வருகிறது அதாவது இனிமேல் வெறும் 30% பரிவர்த்தனைகளை மட்டுமே மூன்றாம் தர செயலிகள், யுபிஐ பரிவர்த்தனைகளை பயன்படுத்திக்கொள்ள முடியும் இதனை இறுதி செய்யலாமா என ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகம் மற்றும் என்பிசிஐ அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர். எனினும் அந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் வரும் டிசம்பர் 31ம் தேதியுடன் இலவசமாக இந்த 3-ம் தரப்பு செயலிகள் யுபிஐ வசதியை அனுகும் காலம் முடிவடைய அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. எனினும் உறுதியான, அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.