வோடஃபோன் பங்கை விற்கும் திட்டமில்லையாம்..
வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகளை இப்போதைக்கு விற்கும் திட்டமில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடன் சுமையில் சிக்கித்தவித்துள்ள வோடஃபோன் நிறுவனம் 24ஆயிரத்து 700 கோடி ரூபாய் அளவுக்கு கடன் சலுகைகளை அரசிடம் கேட்டுள்ளது நிதிதிரட்டிய பிறகு எந்த அப்டேட்டையும் தங்களிடம் தெரிவிக்கவில்லை என்று வோடஃபோன் நிறுவனத்தை சாடியுள்ள தொலைதொடர்புத்துறை அதிகாரி ஒருவர் தங்கள் தரப்பில் இயன்றதை செய்ய இருப்பதாகவும் கூறினார். தற்போது வரை வோடஃபோன் ஐடியா நிறுவனத்தில் அரசின் பங்களிப்பு 23.8 விழுக்காடு பங்குகள் உள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில் 18ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதியை வோடஃபோன் ஐடியா நிறுவனம் திரட்டியுள்ளது. இதனால் அந்நிறுவனத்தின் மதிப்பு சற்று உயர்ந்தது. ஆகஸ்ட் 27 ஆம் தேதி நிலவரப்படி வோடஃபோன் ஐடியா நிறுவன பங்குகள் 15 ரூபாய் 80 காசுகளாக உள்ளது. 24,747 கோடி ரூபாயை வோடஃபோன் நிறுவனம் வரும் செப்டம்பர் 2025-க்குள் அலைக்கற்றை ஒதுக்கீடுக்காக செலுத்த வேண்டியுள்ளது. ஏற்கனவே உள்ள நிலுவைத் தொகைகளைத்தான் வோடஃபோன் நிறுவனம் தற்போது அளித்து வருகிறது. 4 ஆண்டுகள் கால அவசாகம் ஏற்கனவே வோடஃபோன் நிறுவனத்துக்கு மத்திய அரசு அளித்துள்ள நிலையில் , பாரத ஸ்டேட் வங்கி, 14 ஆயிரம் கோடி ரூபாய் கடனை கொடுத்துவிட்டு சலுகைகளையும் அளித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி, பரோடா, யூனியன் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களும் வோடஃபோன் நிறுவனம் பணம் தர சற்று அவகாசம் அளித்துள்ளனர். ஆனால் பழைய கடன்களை அளித்துவிட்டு, விரைவாக 25,000 கோடி ரூபாய் மதிப்பில் கடனை பெற்று 5ஜி சேவையை பெற வோடஃபோன் நிறுவனம் துடித்து வருகிறது.