வோடஃபோன் ஐடியா பற்றி ஃபிட்ச் கூறியது என்ன ?
இந்தியாவில் முக்கிய தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வது வோடஃபோன் ஐடியா நிறுவனம். இந்த நிறுவனம் அண்மையில் அதீத கடன் சுமையில் சிக்கித் தவித்து வருகிறது. இந்த நிறுவனத்துக்கு அரசாங்கமும் நிறைய உதவிகளை அளித்துப்பார்த்தது. ஆனாலும் கடனில் இருந்து அந்த நிறுவனத்தால் மீள முடியவில்லை. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் மூலதன செலவீனம் பற்றி முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த நிறுவனத்தின் மூலதனல செலவீனம் என்பது அதன் போட்டி நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெலை நம்பி இருப்பதாக ரேட்டிங் தரும் பிரபல நிறுவனமான ஃபிட்ச் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த வோடஃபோன் ஐடியா நிறுவனம், தற்போது கடனில் சிக்கித்தவித்து, மூன்றாவது பெரிய டெலிகாம் நிறுவனமாக நிலை மாறியுள்ளது. கூடுதல் மூலதனம் பெறுவதன் அடிப்படையில்தான் வோடஃபோன் ஐடியா நிறுவன செயல்பாடுகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஃபிட்ச் நிறுவனம், அடுத்தாண்டு ஆசிய பசிபிக்கில் உள்ள டெலிகாம் நிறுவனங்கள் செயல்பாடுகள் குறித்து வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.