1.4 பில்லியன் வரி ஏய்ப்பா?

போக்ஸ்வாகன் மற்றும் கியா கார்கள் இந்தியாவில் முறையாக வரி செலுத்துகிறதா என்பது தொடர்பான வழக்கில் இந்திய வரித்துறை அதிகாரிகள் புள்ளி விவரத்தை நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளனர். இந்திய கார் சந்தையில் போக்ஸ்வாகன் கார்கள் மிகச்சிறிய பங்களிப்பை அளித்தாலும், உலகளவில் அந்நிறுவனம் மூன்றாவது பெரிய கார் நிறுவனமாக உள்ளது. இந்த நிலையில் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முறைகேடு நடந்ததாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இதில் போக்ஸ்வாகன் கார்கள் விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த புகார்களை வரித்துறை அதிகாரிகள் நீதிமன்றத்திலும் அளித்துள்ளனர். முறைகேடு புகார் உறுதி செய்யப்பட்டால் சந்தேகிக்கப்படும் 1.4 பில்லியனுக்கு இருமடங்காக அதாவது 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் அதற்கான கால தாமத வட்டியும் செலுத்த நேரிடும். போக்ஸ்வாகன் நிறுவனம் உதிரி பாகங்களை இறக்குமதி செய்து வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும், இவ்வாறு இறக்குமதி செய்து அதனை மீண்டும் ஒருங்கிணைத்தால் வரியாக 30 முதல் 35 விழுக்கா வசூலிக்கப்படும், ஆனால் அவற்றை போக்ஸ் வாகன் நிறுவனம் தவிர்த்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தென் கொரிய நிறுவனமான கியா கார்களும் இது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடித்து எச்சரிக்கப்பட்டதும் அவர்கள் அந்த தவறை திருத்திக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. போக்ஸ்வாகன் போலவே, கியா நிறுவனமும் 155 மில்லியன் அமெரிக்க டாலர் வரி செலுத்துவது தொடர்பாக நீதிமன்றத்தை நாடியுள்ளது. இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 12 ஆண்டுகளாக வழக்கை இழுத்தடிப்பதாக ஃபோக்ஸ்வாகன் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது., இறக்குமதி செய்யப்படும் பொருட்களை வகை படுத்துவதில் உரிய விதிகளைபின்பற்றாவிட்டால் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்று இருதரப்பு வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.