எச்சரிக்கும் ஜீரோதா நிறுவனர்..
கார்பரேட் நிறுவனங்களில் சில துறைகளில் வளர்ச்சி மந்தமாக வாய்ப்புள்ளதாக ஜீரோதா நிறுவனத்தின் உரிமையாளர் நிதின் காமத் எச்சரித்துள்ளார். பொதுத்துறை மற்றும் தனியார் துறைகள் பெரிய பாதிப்பை சந்தித்து உள்ளதாக கூறியுள்ள அவர், ஸ்டார்ட்அப் மதிப்பீடுகள் மிகப்பெரிய அளவில் இருப்பதாக கூறியுள்ள இவர், பிற்பாதியில் அந்நிறுவனங்களுக்கான வளர்ச்சியும் நிதியுதவியும் மங்கி வருவதாக கூறியுள்ளார். இந்திய பங்குச்சந்தைகள் மிகப்பெரிய அளவில் உயர்ந்து, அதே வேகத்தில் வீழ்ச்சியை கண்டு வரும் இந்த சூழலில் ஜீரோதா நிறுவனர் பதிவு பலரையும் அதிர வைத்துள்ளது. கார்பரேட் வளர்ச்சி கடந்தாண்டு ஜூன் மாதம் 44 விழுக்காடு இருந்த நிலையில், கடந்த செப்டம்பரில் அது 40.2விழுக்காடாக குறைந்துள்ளது. மேலும் நடப்பாண்டு ஜூனில் இந்த விகிதம் 7.3விழுக்காடாக வீழ்ந்ததாகவும், கடந்த செப்டம்பரில் இது மைனஸ் 3.4விழுக்காடாக குறைந்துவிட்டதாகவும் நிதின் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். சர்வதேச அளவில் நடக்கும் அரசியல் மாற்றங்களும் வளர்ச்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். நிதித்துறை மற்றும் பொதுத்துறை வங்கிகள் கணிசமாக உயர்ந்து வருகின்றன. அதே நேரம் உலோகத்துறை வளர்ச்சி மிக்குறைவாக உள்ளது. சிமென்ட் துறையில் உள்ளீட்டு கட்டணங்கள் அதிகரிப்பால் 41 விழுக்காடு அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய பங்குச்சந்தைகளுக்கு மாற்றாக வேறுநாட்டு சந்தைகள் பக்கம் முதலீட்டாளர்கள் கவனம் திரும்பினால் சந்தை நிலைத்தன்மை மாறுபடும் என்றும்பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.