வாரன் பஃப்பெட்டின் பெரிய முதலீடு இந்த நிறுவனத்தில்தான்..
உலகின் முன்னோடி முதலீட்டாளர்களில் ஒருவரான வாரன் பஃப்பெட், ஆப்பிள், கொக்க கோலா, பேங்க் ஆப் அமெரிக்கா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளை விட அதிக தொகையை வேறொரு நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார். அதுவும் 78 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். அந்த நிறுவனத்தின் பெயர் பெர்க்ஷைர் ஹாத்வே, ஆம் தனது சொந்த நிறுவனத்தில்தான் வாரன் அதிகம் முதலீடு செய்திருக்கிறார்.
120 விழுக்காடுக்கும் கீழ் புத்தக மதிப்பு சென்றால் மட்டுமே அந்நிறுவனம், பைபேக் அம்சத்துக்கு செல்கிறது. ஆப்பிள், பேங்க் ஆஃப் அமெரிக்கா, கொக்க கோலா, செவ்ரான் ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு 268 பில்லியன் டாலர்களாக உள்ளது. இவை அனைத்தும் 64 விழுக்காடு தொகையாகும். கடந்த 1980,1990களில் கொக்க கோலா, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பிரபலமானபோது அதில் வாரன் அதிகம் முதலீடு செய்தார். செவ்ரான் நிறுவன பங்குகளை 15.4 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாரன் வாங்கியுள்ளார். ஆப்பிளில் வாரனின் முதலீடு 11.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. பெரிய நிறுவனங்களை விட பெர்க்ஷைர் பங்குகள் தான் அதிகம் இருக்கின்றன. நீண்டகால முதலீட்டு திட்டமே தனக்கு பிடிக்கும் என்று வாரன் கூறும் நிலையில், தனது சொந்த நிறுவனத்தில் அதிகம் முதலீடு செய்திருக்கிறார். கடந்த 2024 இரண்டாவது பாதியுடன் பைபேக் திட்டத்தை பெர்க்ஷைர் நிறுவனம் நிறுத்தியது.
