நாம் தோற்கவில்லை… அவங்க ஜெய்சிட்டாங்க – நிதி அமைச்சர் புதிய விளக்கம்!!
அமெரிக்க டாலரின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இதுகுறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்து வரும் நிலையில் அதன் பாதிப்புகளை இந்திய ரூபாய் தாங்கிக்கொள்ளும் திறமை உள்ளதாக கூறப்பட்டுள்ளது
மார்ச் 2023 வரை இந்தியாவின் பொருளாதாரம் 7விழுக்காடு வளரும் என்றும் அவர் ரிசர்வ் வங்கி கணித்ததை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்
உலகளவில் இருக்கும் நாடுகளின் மதிப்புகளை விட இந்திய ரூபாய் மிகச்சிறப்பான நிலையில் உள்ளது என்றும் கூறினார்.
நிலையற்றதன்மையை குறைக்க ரிசர்வ் வங்கி போதுமான நடவடிக்கைகளை செய்து வருவதாக கூறினார்.இந்திய பொருளாதாரமும்,
அன்னிய நாட்டு கையிருப்பும் நல்ல நிலையில் இருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
உலகளவில் நிலவி வரும் நிலையற்ற சூழலை இந்தியா கண்காணித்து வருவதாகவும்,இந்தியாவின் பண வீக்கத்தை 6%க்கு கீழ் கொண்டு வர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.