பங்குச் சந்தைகள் சரிய காரணங்கள் என்ன
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதால் மீண்டெழுந்த இந்திய பங்குச்சந்தைகள், வளர்ந்த வேகத்தில் வியாழக்கிழமை வீழ்ந்தன. அமெரிக்க பெடரல் ரிசர்வ்வின் எப்எம்சி கூட்டத்தை எதிர்நோக்கியதால் இந்த சரிவு காணப்பட்டது.
நேற்றைய வணிகத்தின்போது 958 புள்ளிகள் வரை சென்செக்ஸ் வீழ்ச்சியை கண்டது.
தகவல் தொழில்நுட்பத்துறை, உலோகம், ஆட்டோமொபைல், நிதித்துறை பங்குகள் பெரிய சரிவை கண்டன.
கீழ்காணும் காரணிகளால் இந்திய சந்தைகள் சரிவு ஏற்பட்டுள்ளது …
1.அமெரிக்க பெடரல் ரிசர்வ் கடன்கள் மீதான வட்டிவிகிதம் குறித்த அறிவிப்பை வெளியிடும் என்பதால்தான் பங்குச்சந்தைகள் வீழ்ந்தன.
- அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ந்ததும் இந்திய சந்தைகள் சரிய காரணம்.
3.இந்தியாவில் இருந்து முதலீட்டாளர்கள் அதிகளவில் பணத்தை வெளியே எடுத்தாலும் சந்தைகள் சரிந்தன. அக்டோபர் மாதத்தில் மட்டும் 94,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை முதலீட்டாளர்கள் விற்று பணமாக மாற்றியுள்ளனர்.
4.சீனப்பங்குச்சந்தைகளில் குறிப்பிடத்தகுந்த ஏற்றம் காணப்படுகிறது.
5.இந்திய பங்குச்சந்தைகளில் நிறுவனங்களின் இரண்டாவது காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.
6.சீனாவுக்கு எதிராக டிரம்ப் என்ன முடிவை எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகளவில் உள்ளது.
7.தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதால் இந்திய சந்தைகள் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
நேற்று இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ந்த அதே நேரம் தங்கத்தின் விலையும் கடுமையாக வீழ்ந்தது. ஒரு சவரன் தங்கம் ஆயிரத்து 320 ரூபாய் குறைந்து 57,600 ரூபாயாக விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.165 ரூபாய் குறைந்து , ஒரு கிராம் தங்கம் 7,200 ரூபாயாக விற்பனையானது.இதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து 102 ரூபாயாக விற்பனையாகிறது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 3 ஆயிரம் ரூபாய் குறைந்து 1 லட்சத்து 2 ஆயிரம் ரூபாயாக விற்பனையானது.