அமேசானில் என்ன நடந்தது?
உலகில் பெரிய நிறுவனங்களில் ஒன்றாக அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அமேசான் நிறுவனம் உள்ளது. இந்த சூழலில் தொடர் நிதி இழப்புகள் காரணமாக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 10 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டது இந்த சூழலில் இந்தியாவில் பல்வேறு சேவைகளை அமேசான் அளித்து வருகிறது, இதில் பணியாற்றும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நிலைமை இப்படி இருக்க அண்மையில் சப்தமே இல்லாமல் பலரை அமேசான் நிறுவனம் வீட்டுக்கு அனுப்பிவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான புகாரை மத்திய தொழிலாளர் நலத்துறை ஏற்கனவே கேட்டிருந்தது. இதற்கு பதிலளித்த அமேசான் நிறுவனம்,நாங்களாக யாரையும் இந்தியாவில் பணிநீக்கம் செய்யவில்லை என்றும்
தனித்தனயாக அவரவர் விருப்பத்தின்பேரில்தான் விலக்கிக் கொண்டுவிட்டனர் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு மீண்டும் அமேசானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தொழிலாள்ர் நலனில் துளியும் சமரசம் செய்யாத அந்த அமைப்பு, விதிகளை அமேசான் முறையாக பின்பற்றியுள்ளனவா, என்று ஆராயும் மத்திய அரசு, விதிகளை மீறி இருந்தால் அமேசான் நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளார்
ஏற்கனவே அந்த நிறுவனத்தின் பணியாளர்களுக்கு அளிக்கப்பட்ட சில சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டில் மட்டும் அமேசான் நிறுவனம் தனது கல்வித்துறை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் உணவுத்துறையை மூடிவிட்ட நிலையில், 3-வதாக விநியோகஸ்த உரிமைகளையும் மூடத் திட்டமிட்டுள்ளது.