அமெரிக்காவில் என்னதான் நடக்குது??
அமெரிக்காவில் நிலவும் பொருளாதார மந்தநிலை மற்றும் வேலைவாய்ப்பின்மையால் அந்நாட்டில் பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன.
நிறுவனங்களில் ஆட்குறைப்பு , வணிகம் செய்வதில் ஏற்பட்டுள்ள தொய்வு ஆகிய காரணிகளால் அமெரிக்க பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்து வருகின்றனர்.
இதுதான் சரியான தருணம் என பங்குகள் வாங்குவோரையும் நிதி ஆலோசகர்கள் எச்சரித்துள்ளனர். 2008ம் ஆண்டு இருந்ததை விடவும் அமெரிக்க பங்குச்சந்தைகள் மோசமான நிலையில் உள்ளதாகவும், இந்த நேரத்தில் பங்குகளை வாங்குவது கண்ணை மூடியபடி நீர்வீழ்ச்சியில் விழுவதைப்போன்றது என்றும் விமர்சிக்கின்றனர்
98% பொருளாதார மந்த நிலைக்கான சூழல் நீடிப்பதால், போட்ட பணத்தை திரும்ப எடுப்பதிலேயே முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் அமெரிக்காவின் S&P500 பங்குச்சந்தையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது மொத்த பங்குகளின் மதிப்பு 8 % வீழ்ச்சியை சந்தித்துள்ளது
பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளிலும் மந்த நிலை நீடித்து வருவதால் 2023ம் ஆண்டு வரை மந்தநிலை தொடர அதிக வாய்ப்புள்ளதாகவும் உலகின் சிறந்த பங்குச்சந்தை ஆலோசகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்துகொண்டே செல்வதால் உலகளவில் பெரிய அளவில் மந்த நிலை ஏற்படும் என்றும் பல நாடுகளின் பங்குச்சந்தைகள் சரிவை சந்திக்கவே அதிக வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்படுகிறது. அமெரிக்க பங்குச்சந்தைகளில் பங்குகள் அதிகளவில் விற்கப்படுவது உலகளவில் பேசுபொருளாக மாறியுள்ளது..