செபியின் புதிய விதியில் செய்யப்பட்டுள்ள மாற்றம் என்ன?
தேசிய பங்குச்சந்தையில் இன்டெக்ஸ் டெரிவேட்டிவ் ஒப்பந்தத்தில் அண்மையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பிரீமியம் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. லாட்டின் அளவு தற்போது உள்ளதைவிட மும்மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 25-ல் இருந்து இனி 75 ஆக லாட் அளவு உயர்கிறது. வரும் 20 ஆம் தேதி முதல் இந்த புதிய விதி அமலாகும். எனிழும் ஓவர்ஹெட் சார்ஜஸில் எந்த மாற்றமும் இருக்காது. லாட் அளவுகளை உயர்த்துவதன் மூலம், பிரீமியம் மதிப்பு சற்று குறைகிறது. குறிப்பாக தற்போது 0.12%ஆக இருக்கும் இந்த வரி புதிய விதிகளின்படி 0.07%ஆக குறையும். தரகு தொகையில் எந்த மாற்றமும் இருக்காது. அக்டோபர் 19 ஆம் தேதி கோடக் செக்யூரிட்டீஸ் நிறுவனம் தனது கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்தது. உயர்த்தப்பட்டுள்ள லாட் அளவுகள் வரும் 20 ஆம் தேதி முதல் அமலாக இருக்கின்றன. இதனால் தரகு நிறுவனங்கள் தங்களுக்கும் தரகு கட்டண வருவாய் அகிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.