அமெரிக்காவில் பணவீக்க நிலை என்ன?
அமெரிக்காவில் ஜூலை மாதத்துக்கான வாடிக்கையாளர் பணவீக்கம் விகிதம் 2.9 விழுக்காடாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 0.1 விழுக்காடு குறைந்திருந்த பணவீக்கம், கடந்தமாதம் 0.2 விழுக்காடு உயர்ந்திருக்கிறது.
கடந்த 12 மாதங்களில் ஜூலை மாத பணவீக்கம் 2.9 விழுக்காடாக இருப்பதாக அந்நாட்டு தொழிலாளர் துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன் 2022-ல் அமெரிக்காவில் வாடிக்கையாளர் பணவீக்க அளவானது உச்சபட்சமாக 9.1விழுக்காடாக இருந்தது. ஆனால் இதனை 2 விழுக்காடாக குறைக்க அந்நாட்டு மத்திய ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 17-18 ஆகிய காலகட்டத்தில் நடக்க உள்ள பெடரல் ரிசர்வ்வின் கூட்டத்தில், கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் 50 அல்லது 25 அடிப்படை புள்ளிகளை பெடரல் ரிசர்வ் குறைக்க நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதத்தில் அமெரிக்காவின் வேலைவாய்ப்பின்மை அளவு 4.3%ஆக உயர்ந்த நிலையில், கடன்கள் மீது வட்டி விகிதம் குறைப்பு நடவடிக்கை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. கடந்த 2022-23 காலகட்டத்தில் மட்டும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் 525 அடிப்படை புள்ளிகளை கடன்கள் மீதான வட்டியில் உயர்த்தியுள்ளது. ஜூலை மாத விலைவாசி உயர்வுடன் சேர்த்து கோர் சிபிஐ எனப்படும் விகிதம் 3.2 %ஆக உள்ளது. கடந்த 2021 முதல் கடந்த ஜூன் வரை இந்த விகிதம் 3.3 விழுக்காடாக இருந்தது.