அட்டகாசப்படுத்தும் ஹைப்ரிட் வாகனங்கள் காரணம் என்ன?
இந்தியாவில் மின்சார கார்களைவிட ஹைப்ரிட் வகை வாகனங்கள் விலை ஓரளவு சுமாராக இருப்பதால் அந்த வகை வாகனங்களை வாங்கவே மக்கள் அதிகம் விரும்புகின்றனர் என்கிறார் மாருதி சுசுக்கியின் மூத்த நிர்வாகி சஷாங்க் ஸ்ரீவத்சவா.
மின்சார கார்களை அதிக விலை கொடுத்து வாங்கினாலும் அதில் அதிக தூரம் செல்ல முடியாது என்பதும் பெரிய சிக்கல்களாக இருக்கிறது. உள்நாட்டிலேயே செய்யப்படும் பேட்டரிகளின் உற்பத்தி அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு ஊக்கத் தொகைகளை அளித்து வருகிறது. இந்த வகை பேட்டரிகளை உருவாக்க மாருதி சுசுக்கி நிறுவனம் 10ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறது. இந்த கட்டமைப்பை உற்பத்தி செய்யவும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சார்ஜிங் தேவையில்லை, அதே நேரம் மின்சார வாகனங்களைவிட குறைவாக விலை மற்றும் எவ்வளவு தூரம் செல்லுமோ என்ற அச்சம் தேவையில்லை என்பன உள்ளிட்ட காரணங்களால் ஹைப்ரிட் வகை கார்கள் கவனம் ஈர்த்து வருகின்றன. கரியமில வாயு உமிழ்வை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளதாகவும் அதில் மின்சார வாகனங்கள் பயன்பாடு சிறந்தவை என்றும் குறிப்பிட்டுள்ளார். உலகளாவிய ஆட்டோமொபல் சந்தையில் இந்தியாவுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு என்று ஸ்ரீவட்சவா தெரிவித்துள்ளார்.