வேதாந்தா நிறுவன பங்குகள் விலை உயர காரணம் என்ன ?

கடந்த 2மாதங்களுக்கு முன்பு வேதாந்தா நிறுவனத்தின் உலோக பங்குகள் விலை கடுமையாக சரிந்தன. இந்த நிலையில் தற்போது கதையே வேறமாதிரி மாறிவிட்டது.
ஐரோப்பாவில் ஆற்றல் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது.சீன நிறுவனங்களும் பல்வேறு காரணங்கரளால் உற்பத்தியை நிறுத்தின ஆனால் இதனை சாதகமாக வேதாந்தா நிறுவனம் பயன்படுத்திக்கொண்டுள்ளது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 250 ரூபாய் வரை விற்ற, ஒரு பங்கின் விலை தற்போது 350 ரூபாயாக உயர்ந்துள்ளது
இந்தியாவில் செமி கண்டெக்டர் ஆலைய வேதாந்தா நிறுவனம் நாட்டுக்குள் கொண்டுவர முதலில் முயற்சித் ததால் இந்த விலையேற்றம் சாத்தியமாகியுள்ளது. குஜராத்தில் செமிகண்டெக்டரும், மகாராஷ்டிராவில் ஐபோன் ஆலைகளுக்கும் வேதாந்தா நிறுவனம் உற்பத்தி செய்ய உள்ளன. வேதாந்தாவின் உப நிறுவனமான வேதாந்தா ரிசர்வச்ஸர்ஸ் 250 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்ய உள்ளது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் திட்டமும் இருப்பதால் வேதாந்தா குழும பங்குகள் மதிப்பு ஏற்றம் காண்கின்றன. . மேலும் கடந்த ஏப்ரல் மாதம் வேதாந்தாவின் பங்குகள் மிக அதிகபட்டசமாக ஒரு பங்கு 440.75 ரூபாய்க்கு விற்கப்பட்டது.இதேபோல் கடந்த ஜூலை 1-ம் தேதி குறிப்பிட்ட அந்த பங்கு மிக்கக் குறைவா 206 ரூபாய் 10 பைசாவுக்கு விற்கப்பட்டது .
கடந்த 6 நட்களில மட்டும் வேதாந்தா குழும பங்குகள் சுமார் 20 விழுக்காடு ஏற்றம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.