இத்தனை லட்சம் கொடுத்து வாங்குற கார்ல என்னதான் இருக்கும்??!!!!
உலகளவில் சொகுசு கார்களை உற்பத்தி செய்வதில் ஜீப் நிறுவனத்துக்கு தனி இடம் உள்ளது இந்த வரிசையில் இந்தியாவில் புதிய காரை ஜீப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜீப் நிறுவனத்தின் 5-வது தலைமுறையான கிராண்ட் செரோக்கீ என்று பெயரிடப்பட்டுள்ள கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது இதன் அறிமுக விலையாக ஷோரூமில் ஒரு காரின் ஆரம்ப விலை ரூ.77.5 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வெளியே வட அமெரிக்காவில் செரோக்கீ கார்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகவும், எஸ்யூவி ரக கார்கள் இந்தியாவிலேயே அசம்பிள் எனப்படும் ஒருங்கிணைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது இந்த சொகுசு காரில் 7 பேர் தாராளமாக பயணிக்க முடியும்
அட்டகாசமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஹெட்லைட்கள்,மிகவும் நேர்த்தியான பம்பர்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்திய வாடிக்கையாளர்களுக்கு தகுந்தபடி 5 சீட் கொண்ட மாடலிலும் தயாரிக்கப்பட்டுள்ளது இந்த காரில் உள்ள 10.1அங்குள இன்ஃபோடெயின்மெண்ட் அம்சம் எளிதாக ஸ்மார்ட் போன்களுடன் இணைத்துக்கொள்ள முடியும் இந்த காரில் ரியர் சீட் எண்டர்டெயின்மெண்ட் வசதியும் இருக்கிறது. 2.0லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜ் பெட்ரோல் இன்ஜின் 268 பிஎச்பி, 400நானோமீட்டர் டார்க் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியும் செரோக்கீ கிராண்ட் காரில் உள்ளது
வால்வோ, ரேஞ்ச் ரோவர்,மெர்சிடீஸ், ஆடி ஆகிய கார்களுக்கு போட்டியாக சந்தையில் களமிறக்கப்பட்டுள்ளது.