5ஜி எப்ப சார் தருவீங்க???
இந்தியாவில் 5ஜி சேவையை அண்மையில் பிரதமர் மோடி,தொடங்கி வைத்தார். ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள், 5ஜி சேவையை குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் அளித்து வருகின்றன. இந்த நிலையில் ஆப்பிள்,சாம்சங்க் நிறுவனங்கள் தங்கள் போன்களில் 5ஜி சாப்ட்வேரை அளிக்க போதுமான பணிகளை செய்யும்படி மத்திய அரசு அழுத்தம் தருகிறது.
இதுகுறித்து உயர்மட்ட கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முன்னணி செல்போன் நிறுவனங்களான,ஆப்பிள்,சாம்சங்க்,விவோ உள்ளிட்ட நிறுவனங்களும்,ஜியோ,ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவன அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளனர்.
5 ஜி சேவையை அனைத்து பகுதிக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் அழுத்தம் தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் சிம்கார்ட் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் கூட்டம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
5ஜி சேவையை அளிப்பதன் மூலம் பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தாண்டு இறுதிக்குள் 5ஜி சேவையை இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்க இந்த கூட்டம் மிகமுக்கியமாக பார்க்கப்படுகிறது.