தங்கம் அதிகம் வைத்திருக்கும் 10நாடுகள்..
செல்வத்தின் அடையாளமாக கருதப்படும் தங்கத்தை பல நூற்றாண்டிகளாக மக்கள் பாதுகாப்பாக வைக்கின்றனர். தங்கம் பாதுகாப்புக்காகவும், பணவீக்கம் அதிகரிக்கும்போதும் பயன்பட்டு வருகிறது. உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிக தங்கம் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் மட்டும் 8133 மெட்ரிக் டன் அளவு தங்கம் இருப்பில் உள்ளது. கென்டக்கி என்ற பகுகியில் அதிகளவில் சேமிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் அலுவலகமான நியூயார்க் அலுவலகத்திலும் தங்கம் சேமிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்தபடியாக ஜெர்மனியிடம் 3355 மெட்ரிக் டன் தங்கம் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் பெரும்பாலான தங்கம் ஃபிராங்க்ஃபர்ட் நகரில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனிக்கு அடுத்தபடியாக இத்தாலியிடம் 2452 மெட்ரிக் டன் அளவுக்கு தங்கம் உள்ளது. இந்த தங்கம் இத்தாலிய மத்திய வங்கியில் உள்ளது. நிதி நிலையற்ற சூழல் வரும் போது தங்கம் வெளியே எடுக்கப்படுகிறது. இத்தாலிக்கு அடுத்த இடத்தில் ஃபிரான்ஸ் நகரத்தில்தான் அதிக தங்கம் கையிருப்பு உள்ளது., அந்நாட்டில் 2437 மெட்ரிக் டன் அளவுக்கு தங்கம் அந்நாட்டு மத்திய வங்கியில் வைக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ்க்கு அடுத்த இடத்தில் ரஷ்யா உள்ளது. ரஷ்யாவசம் தற்போது வரை 2299 மெட்ரிக் டன் தங்கம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ரஷ்ய மத்திய வங்கி, தங்கத்தை கணிசமாக வாங்கி குவித்து வருகிறது. ரஷ்யாவுக்கு அடுத்த இடத்தில் சீனா உள்ளது சீனாவிடம் 1948 மெட்ரிக் டன் அளவுக்கு தங்கம் கையில் உள்ளது. ஒரே இடமாக வைக்காமல் சீனாவின் பல்வேறு பகுதிகளில் தங்கம் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக ஸ்விட்சர்லாந்து வசம் தங்கம் அதிகம் உள்ளது. அந்நாட்டில் ஆயிரத்து 40 மெட்ரிக் டன் அளவுக்கு தங்கம் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது. சூரிச் உள்ளிட்ட பல நகரங்களில் அந்நாட்டு தங்க சேமிப்பு கிடங்குகள் உள்ளன. இந்த பட்டியலில் ஸ்விஸ் நாட்டுக்கு அடுத்த இடத்தில் ஜப்பான் உள்ளது. ஜப்பானின் வசம் 846 மெட்ரிக் டன் அளவுக்கு தங்கம் சேமிப்பாக உள்ளது. பொருளாதார நிலைத்தன்மைக்காக இந்த தங்கம் வைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 9 ஆவது இடம் கிடைக்கிறது. இந்தியாவிடம் 801 மெட்ரிக் டன்அளவுக்கு தங்கம் உள்ளது. இதன் மதிப்பு 48 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. நிதிச்சுமை வரும்போது தங்கம் பெரியளவில் கைகொடுக்கிறது. இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் நெதர்லாந்து உள்ளது. நெதர்லாந்தின் வசம் 612 மெட்ரிக் டன் அளவுக்கு தங்கம் கையில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் துருக்கி, போர்சுகீசியம் ஆகியவை இடம்பிடித்துள்ளன.