பிரிட்டானியா ஏன் நீண்டகால முதலீடுக்கு சரி..

பிரிட்டானியாவின் சந்தை மூலதனம் 1.17லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. மிகச்சிறப்பான விநியோக சங்கிலி, கிராமபுறங்கள் வரை பிரிட்டானியா சென்றடைந்தது உள்ளிட்டவை பிரிட்டானியாவை நீண்டகால நம்பிக்கை நிறுவனமாக கருத வைக்கிறது. பண்டிகை காலங்கள், அதிக பணவீக்கம் உள்ளிட்ட அம்சங்களால் சில ஏற்ற இறக்கத்தை இந்த நிறுவனம் சந்திக்கிறது. பிஸ்கட் துறையில் மட்டும் பிரிட்டானியாவின் பங்கு 65%ஆக உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் தான் பார்லேவும் ஐடிசியும் உள்ளன. உள்ளூர் பிராண்டுகளால் பிரிட்டானியாவின் வளர்ச்சியும் தடைபடுகிறது. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளின் மதிப்பு 40 விழுக்காடு வரை உயரக்கூடும் என்று கூறப்படும் நிலையில், இதில் கிராமத்தின் பங்கு 35விழுக்காடாக உள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் பாதியாண்டில நகரங்களில் வீட்டு உபயோக அன்றாட பயன்பாட்டுப் பொருட்கள் விற்பனை சரிந்துள்ளது. இதே நேரம் கிராமங்களை பிரிட்டானியா கவனம் செலுத்தியுள்ளது. மார்ஜின் குறைவு, பணவீக்க அழுத்தமும் இந்த நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளது. அடுத்த 2 காலாண்டுகளில் 4 முதல் 5 விழுக்காடு வரை சில பொருட்களின் விலையை பிரிட்டானியா உயர்த்த திட்டமிட்டுள்ளது. கிராமபுறங்களில் சிறப்பான விற்பனை உள்ளபோதும், விலை குறைவு என்ற புள்ளியில் வென்றுவிடுகிறது பிரிட்டானியா. தற்போதைய காலகட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு பிரிட்டானியா சரியான தேர்வாக உள்ளது. ரிஸ்க் எடுத்தாலும் நீண்டகால முதலீடுக்கு உகந்த நிறுவனமாக பிரிட்டானியா உள்ளது.