ஏன் பல நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ்?
புத்தாண்டு தினத்தில் எல்ஐசி நிறுனத்துக்கு ஜிஎஸ்டி அமைப்பில் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது. அதுவும் 2017-2018 ஆண்டுக்கான ஜிஎஸ்டி செலுத்தப்படவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் மகாராஷ்டிரா மாநிலத்தில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள் தெலங்கானாவிலும் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இந்துஸ்தான்யுனிலிவர் நிறுவனத்துக்கும் இந்த நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் 447.5 கோடிரூபாய் செலுத்த வேண்டுமாம்.இதேபோல் சொமேட்டோ நிறுவனத்துக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் டெல்லி மற்றும் கர்நாடக வணிகத்துக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி 2018 ஆம் 4.2 கோடி ரூபாய்க்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது இது மட்டுமின்றி எய்ச்சர் மோட்டர்ஸ்,ஆசியன் பெயின்ட்ஸ், நெஸ்ட்லே இந்தியா மற்றும் ஐசிஐசிஐ புரு ஆகிய நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இது தவறுதலாக அளிக்கப்பட்ட நோட்டீஸா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலையில் 2018-2019 ஆம் ஆண்டு செலுத்த வேண்டிய நிதியாண்டுக்கான அவகாசம் செலுத்த காலக்கெடு ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. கேமிங் துறையில் மட்டும் 1.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் காப்பீட்டுத்துறைக்கு 5,500கோடியும், ரியஸ் எஸ்டேட் துறைக்கு 2,000கோடி ரூபாய்க்கும் ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. 2017-2018, 2018-2019 ஆம் ஆண்டுக்கான கணக்குகளில் பிழைகளால் இந்த நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த நோட்டீஸ்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்ற போதிலும்வரி செலுத்தும் முறையை பெரிய நிறுவனங்கள் கண்காணிக்க அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த வரிச்சலுகைகள் 2017ஆம் ஆண்டில் இருந்தன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சலுகைகள் கொரோனா காரணமாக அளிக்கப்பட்டன. ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் அளிக்கப்பட்டது. மனிதர்கள் இல்லாமல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த நோட்டீஸ்கள் கோடிக்கணக்கில் ஒரே நேரத்தில் அனுப்பி வரப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியவர்களிடம் இருந்து கண்டிப்புடன் வரியை வசூலிக்க தொழில்நுட்பங்களை மத்திய அரசு களமிறக்கியுள்ளது.
2023 டிசம்பர் 31 ஆம்தேதி வரை இருந்த அவகசாம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பல பெரிய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் சென்றுள்ளது.