அரிசி ஏற்றுமதிக்கு தடை ஏன்?: அரசு விளக்கம்
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. சில ரக அரிசிகள் ஏற்றுமதிக்கு மட்டும் 20% கூடுதல் வரி வித்தக்கப்பட்டுள்ளது, இதற்கு காரணம் என்ன என்று மத்திய அரசின் உணவுத்துறை செயலாளர் விளக்கம் தெரிவித்துள்ளார். உணவுப் பொருட்களில் விலையேற்றம் மற்றும் அதிகளவு ஏற்றுமதியே காரணிகள் என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது
இந்தியாவில் நடப்பாண்டின் முதல் நாளில் 16 ரூபாயாக இருந்த உடைத்த அரிசி, செப்டம்பர் மாதம் 8ம் தேதி கிலோ 22 ரூபாயாக உயர்ந்துள்ளது. அரிசியின் ஒட்டுமொத்த விலை 8.22 விழுக்காடும்,சில்லறையில் 6.38விழுக்காடும் உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இருந்து,சீனா,வியட்னாம்,உள்ளிட்ட நாடுகளுக்கு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் மட்டும், அரிசி ஏற்றுமதி 319 விழுக்காடு அதிகரித்துள்ளது.
நொய் எனப்படும் உடைத்த அரிசி ஏற்றுமதி 2019 ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் 1.34 விழுக்காடு மட்டுமே இருந்தது. ஆனால் அது தற்போது 22.78 விழுக்காடாக உயர்ந்துள்ளது. அதிகப்படியான ஏற்றுமதியை கட்டுப்படுத்தவே தடை நடவடிக்கையை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் முக்கிய அரிசி உற்பத்தியாளரான மேற்குவங்கம்,பீகார்,உத்தரபிரதேசத்தில் போதிய மழை இல்லாமல் இருப்பதே உற்பத்தி குறைவுக்கு காரணமாகவும் கூறப்படுகிறது.