ஐபிஓகளுக்கு ஏற்றம் தருமா 2025
2024 ஆம் ஆண்டு பஜாஜ்,ஸ்விகி, ஹியூண்டாய் நிறுவனங்களின் ஐபிஓகள் ஆரம்ப பங்குகளை வெளியிட்டு முதலீடுகளை ஈர்த்தன. இந்த நிலையில் இந்த வாரத்தில் 8 ஐபிஓகள் நிதியை திரட்ட இருக்கின்ற. 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கும், 64 விழுக்காடு அதிகளவு பணமும் முதலீடு செய்யப்பட்டன. இது கடந்த 2021-ல் வெறும் 1.88லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 2025-லும் இதே முன்னேற்றம் தொடரும் என்று முதலீட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். 2024-ல் மட்டும் 90 நிறுவனங்கள் ஐபிஓ வாயிலாக 1.62லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளதாகவும் கடந்தாண்டு வெறும் 49,436கோடி ரூபாய் மட்டுமே திரட்டப்பட்ட நிலையில், இந்தாண்டு 2.2 மடங்கு அதிகம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2025-ல் இந்தியாவில் எல்ஜி, ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் ஆரம்ப பங்குகளை வெளியிட இருக்கின்றன. 15 பில்லியன் அமெரிக்க டாலர்களை அடுத்தாண்டு பட்டியல் இட எல்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பிளிப்கார்ட் நிறுவனம் 36 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்டதாகும். ஹீரோ மோட்டோ கார்ப், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், முத்தூட் பைனைான்ஸ், உள்ளிட்ட நிறுவனங்கள் பட்டியலிட தயாராகி வருகின்றன. ரிலையன்ஸ் ஜியோ, டாடா பேசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி ஆகிய நிறுவனங்களும் அடுத்தாண்டு பட்டியலிடப்பட உள்ளன. இந்திய ஐபிஓகளுக்கு தாய் என வர்ணிக்கப்படும் ஹியூண்டாய் மோட்டார் நிறுவன ஐபிஓ 27,870 கோடி ரூபாய் வசூலித்து இந்தியாவின் முதன்மை சந்தையில் இடம்பிடித்துள்ளது. 2022-ல் எல்ஐசி நிறுவனம் 20,557 கோடி ரூபாய் பெறப்பட்டதே அதிக தொகையாக இருந்த நிலையில், அதனை வரும் ஆண்டில் பிற ஐபிஓகள் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025-ல் ஜியோ நிறுவனம் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு மதிப்பு கொண்டுள்ள நிலையில்,அதன் சில்லறை பிரிவில் ஐபிஓ இருக்கும் என்று கூறப்படுகிறது.