இன்னும் 30 நாள் எடுத்துக்கோங்க..
இந்தியாவில் முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்றாக திகழும் விப்ரோ நிறுவனம், தனது பணியாளர்கள் ஹைப்ரிட் முறையில் மேலும் 30 நாட்கள் பணியாற்ற இசைவு தெரிவித்துள்ளது. அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது. உடல்நலக்குறைவு, தங்கள் அன்புக்குரியவர்களை பார்த்துக்கொள்ள நேரம் தேவைப்படும்போது இந்த 30 நாட்கள் ஹைப்ரிட் வகை பணியை பணியாளர்கள் தேர்ந்தெடுக்கலாம் என்றும் விப்ரோ நிறுவனம் சலுகை அளித்துள்ளது. இரண்டுபிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த வகை சலுகை, ஆண்டுக்கு 15 நாட்கள் உடல்நிலை சரியில்லை என்றால் எடுத்துக்கொள்வது ஒரு ரகம்.
குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிட விரும்புவோருக்கு கூடுதலாக 15 நாட்களும் ஆண்டில் கிடைப்பது இரண்டாவது ரகம். இந்த புதிய திட்டம் குறித்து விப்ரோவின் தலைமை மனிதவள பிரிவு அதிகாரி சவுரப் கோவில் லிங்கிடு இன் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார். சவாலான நேரங்களில் தங்கள் பணியாளர்களுக்கு உதவும் நோக்கில் இந்த ஏற்பாட்டை செய்திருப்பதாக கோவில் குறிப்பிட்டுள்ளார். தொழில்நுட்பத்துறையில் பல்வேறு சவால்கள் இருந்து வரும் நிலையில், பணியாளர்களை தக்க வைக்கும் வகையில் விப்ரோ நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பல்வேறு சலுகைகள் காரணமாக விப்ரோவில் இருந்து வெளியேறும் பணியாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த மார்ச் மாத இறுதியில் விப்ரோ நிறுவன பணியாளர்களின் எண்ணிக்கை 2.34லட்சமாக இருந்த நிலையில், ஜூன் மாத காலாண்டில் 2.34லட்சமாகவே தொடர்கிறது. வெறும் 337 பேர் மட்டுமே வேலையை விட்டு சென்றுள்ளனர்.