ஜீ நிறுவன டீல் பாதகமாக முடிந்ததாம்..
டிஸ்னி நிறுவனத்துடனான கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்தில் இறுந்து ஜீ நிறுவனம் விலகியுள்து. 1.4 பில்லியன் அமெரிக்கடாலர் மதிப்பு கொண்ட இந்த டீல் மொத்தமாக முடிவுற்றது. ஐசிசி கிரிக்கெட் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்காக கடந்தாண்டு டிஸ்னியுடன் ஜீ நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒளிபரப்பு உரிமம் 4 ஆண்டுகளுக்கு செய்யப்பட்டது.
அதாவது தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை ஜீ நிறுவனத்துக்கும், டிஜிட்டல் உரிமம் டிஸ்னியும் செய்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜீ நிறுவனத்துடனான ஒப்பந்தம் ரத்தாவதாக டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே டிஸ்னிக்கு 200மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணத்தை ஜீ நிறுவனம் செலுத்தவேண்டியிருந்தது. அதையும் செலுத்தாததால் டீலை பாதியிலேயே முடிக்க திட்டமிடப்பட்டது. எந்த வித முன்னேற்றமும் இல்லாததால் இந்த டீல் பாதியிலேயே முடிந்துள்ளது.
ஏற்கனவே சோனியுடன் இணைய முடியாமல் பாதியில் டீல் நின்றுவிட்ட நிலையில் , தற்போது டிஸ்னியுடனான ஒப்பந்தமும் ரத்தாகியுள்ளது. ஜீ நிறுவனத்தின் விளம்பர வருவாய் 488 மில்லியன் அமெரிக்க டாலர்களாக சரிந்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனத்தின் விளம்பர வருவாய் 600மில்லியன் டாலராக இருந்தது.அந்நிறுவனத்தின் பண கையிருப்பு 5 ஆண்டுகளுக்கு முன்பு 116 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. தற்போது அது வெறும் 86 மில்லியன் அமெரிக்க டாலர்களாக சரிந்துள்ளது.