22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

Zepto போடும் புதுக்கணக்கு..

விரைவு வர்த்தக செயலி நிறுவனமான ஸெப்டோ (Zepto), 45 கோடி டாலர் அளவுக்கு புதிய முதலீடுகளை திரட்ட உள்ளது. இந்நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 700 கோடி டாலராக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் மொத்தம் 100 கோடி டாலர் அளவுக்கு நிதி திரட்ட உள்ளதாக கூறப்படுகிறது.

முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பங்கு வெளியிடுகளை கொண்ட தற்போதைய வெளியீட்டை, அமெரிக்க ஓய்வூதிய நிதியான கால்பர்ஸ் (Calpers) வழிநடத்த உள்ளது.

தற்போதுள்ள முதலீட்டாளர்களான ஜெனரல் கேடலிஸ்ட் (General Catalyst(, அவ்ரா (Avra), லைட்ஸ்பீட் (Lightspeed), ஸ்டெப்ஸ்டோன் (StepStone) மற்றும் நெக்சஸ் வெஞ்சர் பார்ட்னர்ஸ் (Nexus Venture Partners) ஆகிய நிறுவனங்களும் இதில் முதலீடு செய்ய உள்ளன.

இதுவரை இந்நிறுவனம், 500 கோடி டாலர் மதிப்பீட்டில் மொத்தம் 200 கோடி டாலர் அளவுக்கு முதலீடுகளை திரட்டியுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 135 கோடி டாலர்களை திரட்டியது. விரைவு வர்த்தக துறையில் இரண்டு பெரிய இணைய வர்த்தக (e-com) நிறுவனங்களான அமேசான் மற்றும் ஃபிலிப்கார்ட் நுழைவதால, இதில் கடும் போட்டி உருவாகியுள்ளது.

இதனால் ஸேப்டோவிற்கு 100 கோடி டாலர் அளவுக்கு புதிய முதலீடுகளை ஈர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

Zepto அதன் பணப் பற்றாக்குறையை வெகுவாக குறைத்துள்ளது. இதன் மூலம் 100 கோடி டாலர் நிதியை சேமித்து வைக்க சாத்தியமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஸெப்டோ ஒவ்வொரு காலாண்டிலும் சுமார் ரூ.180 கோடி இழப்பை எதிர் கொண்டு வந்தது. இந்நிலையில் மே மாதத்திலிருந்து இது இரட்டை இலக்கங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் உருவாக்கிய புதிய வருவாய் பிரிவுகள் இதற்கு ஒரு காரணம் என்று தகவல்கள் கூறுகின்றன. புதிய வகை விளம்பர வருவாய் மற்றும் இதன் தளத்தில் தனியார் லேபிள்களை அறிமுகப்படுத்துவது போன்றவை இதில் அடங்கும்.

ஸெப்டோவின் விளம்பர வருவாய் கடந்த ஆண்டு 4 கோடி டாலராக இருந்து இந்த ஆண்டில் 20 கோடி டாலராக அதிகரித்துள்ளதாக, அதன் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆதித் பாலிச்சா எப்ரலில் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *