ஐபோன் விலை அதிகரிக்க வாய்ப்பு??
உலகிலேயே பெரிய ஐபோன் உற்பத்தி ஆலை சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ளது, குறிப்பிட்ட இந்த ஆலையில் சுமார் 2 லட்சம் பேர் வரை பணியாற்றும் வசதியுள்ளது. செங்க்சாவ் என்ற பகுதியில் உலகின் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி ஆலைக்கு அருகே அண்மையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு நபருக்கு கொரோனா இருந்தாலும்கூட அவர் பணியாற்றிய இடம் அனைத்திலும் கோவிட் பாதுகாப்பு விதிகளை சீன அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சீன ஐபோன் உற்பத்தி ஆலைக்கு அருகே பரவும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் ஐபோன் ஊழியர்களை வீட்டுத் தனிமையில்
வைக்க சீனா முடிவெடுத்துள்ளது. போதிய இட வசதி, தனிமைப்படுத்த வசதி இல்லாத நிலையில் பல ஊழியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர் சில தனியார் நிறுவனங்கள் தனிமை முகாம்களில் வைத்து சீன தொழிலாளர்களை கண்காணித்து வருகின்றனர்.
பெருந்தொற்றில் இருந்து மெல்ல மெல்ல மீண்டுவருவதாக மக்கள் கருதிய நிலையில் தற்போது சீனாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பதால் ஐபோன் உற்பத்தி மற்றும் தொடர் சங்கிலி முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஊழியர்களில் சிலருக்கு கட்டாய ஒரு வார தனிமை அளிப்பது உற்பத்தியை வெகுவாக பாதித்து உள்ளது நிலைமை இப்படி இருக்க, பல நிறுவனங்களில் வீட்டிற்கே பணியாளர் செல்லாமல், ஆலைகளிலேயே பணியாளர்களை தங்க அனுமதித்து உள்ளனர். இதனால் உற்பத்தி பாதித்தாலும் வெளியுலக தொடர்பை தவிர்க்க முடிவாதாக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பா, ஆசியாவில் இருந்து வரும் உதிரி பாகங்கள் செங்சாவ் ஆலையில்தான் ஊழியர்களால் அசம்பிள் செய்யப்படுகிறது. சீனாவில் கொரோனா அதிகரித்து வந்தாலும் தங்கள் நிறுவனத்தில் சிறிய அளவிலான பணியாளர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக
பாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது.