சிங்கப்பூரில் இருந்து நொடிகளில் பணம் பெற வசதி..
இந்தியாவில் , பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் மத்திய அரசின் UPI கட்டமைப்புடன் பே நவ் என்ற நிறுவனமும் இணைநந்து புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் விரைவாக, பாதுகாப்பாக சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு பணம் அனுப்பி வைக்க முடியும். BHIM, phonepe,பேடிஎம் ஆகிய செயலிகள் வாயிலாகவும் இந்த வசதி கிடைக்கும். Axis Bank, DBS Bank India, ICICI Bank, Indian Bank, Indian Overseas Bank, State Bank of India ஆகிய வங்கிகளின் உதவியுடனும் இந்த வசதியை பற முடியும் என்று தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் அறிவித்துள்ளது.
Bank of Baroda, Bank of India, Canara Bank, Central Bank of India, Federal Bank, HDFC Bank, IDFC First Bank, IndusInd Bank, Karur Vysya Bank, Kotak Mahindra Bank, Punjab National Bank, South Indian Bank,UCO Bank உள்ளிட்ட நிறுவனங்களும் இந்த இணைப்பை விரைவில் பெற இருக்கின்றன. நொடிகளில் பணம் அனுப்பி வைக்கப்பட்டாலும், பாதுகாப்பாகவும், மிகவும் குறைந்த விலையிலும் பணத்தை அனுப்பி வைக்க முடியும்,மேலும் இந்த வசதி ஆண்டின் 365 நாட்களும், 24 மணி நேரமும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு நாளில் அதிகபட்சமாக 60ஆயிரம் ரூபாய் அதாவது ஆயிரம் சிங்கப்பூர் டாலர் மட்டுமே இந்தியாவுக்கு அனுப்பி வைக்க முடியும். தற்போதுவரை கிஃப்ட் அளிக்கும் வகையில் மட்டுமே தனிநபர்கள் மட்டும் பயன்படுத்தும் நிலையில் பணம் அனுப்பி வைக்க இயலும்.யுபிஐ கட்டமைப்பு எப்படி இயங்குகிறதோ அதே பாணியில் யுபிஐ, பேநவ் மூலம் பணம் அனுப்பி வைக்கலாம்