அதிரடி முடிவெடுத்த கோகா கோலா…
இந்தியாவின் மிகப்பெரிய கூல்டிரிங்க்ஸ் நிறுவனமாக கோகா கோலா நிறுவனம் திகழ்கிறது. இந்நிறுவனத்தின் கண்ணாடி பாட்டில்கள் தயாரிக்கும் HCCB நிறுவனம் இந்தியாவின் 3 பகுதிகளில் உள்ள பாட்டில் தயாரிக்கும் ஆலைகளை வேறொரு நபருக்கு கைமாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்குப்பகுதிகளில் உள்ள பிரான்சைசிகளை மாற்ற திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே பணிகளை செய்து வந்த நிறுவனங்களிடம் இருந்து கைமாற்றி உள்நாட்டு பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக கொகா கோலா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி கடந்த நவம்பர் மாதமே தகவல் வெளியாகியிருந்த நிலையில் அதனை கோகா கோலா நிறுவனம் உறுதி செய்திருக்கிறது.
ராஜஸ்தான், டெல்லி, ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, லடாக் உள்ளிட்ட பகுதிகளில் வெவ்வேறு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கைமாற்றப்படுகிறது. வழக்கமாக சேவைகளை வழங்கி வந்த நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தம் கைமாற்றப்பட்டதால் முதலீடுகளும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறுத. இந்தியாவில் hcbbநிறுவனத்துக்கு 16 இடங்களில் ஆலைகள் உள்ளன.
பாட்டில் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்களுடன் கைகோர்ப்பதால் அந்நிறுவனத்தில் புதுமைகள் கிடைக்கும் என்றும், கட்டமைப்புகள் மாற்றப்படும் என்றும் தொழில்நுட்பங்கள் மாறும் என்றும் வியாபாரம் அதிகரிக்கும் என்றும் கோகா கோலா நிறுவனம் தெரிவித்துள்ளது.